சிதம்பரத்தில் தைப்பூசம் நடராஜர் கோவிலில் தீர்த்தவாரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் தைப்பூசம் நடராஜர் கோவிலில் தீர்த்தவாரி

Added : பிப் 09, 2020
Share

சிதம்பரம்:தைப்பூசத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர் தவத்தை ஏற்று தைப்பூச நாளில் சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் புரிந்ததாக வரலாறு. அதனையொட்டி நடராஜர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நடந்தது.முன்னதாக, கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. நடராஜர் கோவிலில் உள்ள ஆதிமூலநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர், மதியம் 2:30 மணிக்கு, கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில், பஞ்சமூர்த்திகள், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோர் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான அஸ்திரராஜர் நீரில் மூழ்கி எழுந்தருளி காட்சியளித்தார்.பின்னர், கோவிலில் உள்ள சித்சபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X