வேளாண் கூட்டுறவு வங்கி அலுவலக கட்டட பணிகள் நிறுத்தம்

Added : பிப் 09, 2020
Advertisement

ஆண்டிபட்டி, அனுப்பபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பு அறையுடன் கூடிய அலுவலக கட்டடத்துக்கான கட்டுமானப்பணி துவக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.சட்டசபையில் 110 விதியின் கீழ் தேனி மாவட்டத்தில் அனுப்பபட்டி, ராயப்பன்பட்டி, பூதிப்புரம் ஆகிய ஊர்களில் உள்ள வேளாண்கூட்டுறவு வங்கிக்கு பாதுகாப்பு அறையுடன் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு தலா ரூ.25 லட்சம் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அனுப்பபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கட்டுமானப்பணிக்கான எஸ்டிமேட், டெண்டர், வேலை அனுமதி உத்தரவு வழங்கப்பட்டு, கட்டுமானத்தில் முதற்கட்ட பணிகள் துவங்கியது.கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் பணிகளை நிறுத்தச்சொல்லி வாய் மொழி உத்தரவிட்டுள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அனுப்பபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் தங்கையா தெரிவித்ததாவது:கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை மூலம் பாதுகாப்பு அறையுடன் கூடிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ரூ.25 லட்சம் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டது. வட்டி இல்லாத இக்கடனை ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். கட்டுமானத்தில் அதிகாரிகள் தரமற்ற பணிகளுக்கான ஆலோசனை தருகின்றனர். இதனை ஏற்க மறுத்ததால் கடன் தொகையை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இதனால் பணிகள் துவக்க நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது, என்றார். ----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X