சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து தாக்குதல்: நால்வர் கைது

Added : பிப் 09, 2020
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் சோழத்தரம் அடுத்த புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும், இட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்த அழகேசன் மற்றும் குடும்பத்தினரை குப்புசாமி தரப்பினர், 20க்கும் மேற்பட்ட கூலிப்படையினருடன் கிராமத்திற்குள் நுழைந்து தாக்கினர். பொக்லைன் இயந்திரத்தால் வீட்டை இடித்து தள்ளினர்.தடுக்க வந்த கிராம மக்களை கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் புடையூர் கிராமத்தை சேர்ந்த நடனம், விஜயலட்சுமி, ராஜ்குமார் உள்ளிட்ட ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.கிராம மக்கள் திரண்டு, தாக்குதல் நடத்தியவர்களில், 4 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.புகாரின் பேரில், சோழத்தரம் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, பெரம்பலூர் மாவட்டம் கல்லையை சேர்ந்த குப்புசாமி, 65; பெரம்பலூரை சேர்ந்த பரமசிவம், 50; ஆனந்த், 32,; ஸ்டீபன் ஸ்டாலின், 30, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X