பொது செய்தி

இந்தியா

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : பிப் 09, 2020
Advertisement

புதுச்சேரி:டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாரத்தில் உள்ள எஸ்.ஆர் சுப்ரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
குயவர்பாளையம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். டாக்டர் அஸ்வினி முன்னிலை வகித்தார்.உதவி இயக்குனர் (மலேரியா) கணேசன் தலைமை தாங்கி, டெங்கு நோய் பரவும் விதம் குறித்தும், டெங்கு அறிகுறிகள், மருத்துவ சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் டெங்கு உலர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்து எடுத்துரைத்தார்.சுகாதார உதவி ஆய்வாளர் தாமோதரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சுகாதார உதவி ஆய்வாளர்கள் சுதாகர், வெங்கட்ராமன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X