முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் முதல்வருக்கு பா.ஜ., தலைவர் கோரிக்கை

Added : பிப் 09, 2020
Advertisement

புதுச்சேரி:பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.102கோடிகூடுதலாகநிதி ஒதுக்கிய நிலையில்,மத்திய அரசைமுதல்வர்குறை சொல்லுவது ஏற்க முடியாது எனு பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்தாண்டை விட புதுச்சேரிக்கு இந்தாண்டு ரூ.102 கோடி அதிகமாக ஒதுக்கி உள்ளது. கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.1601 கோடியில் இருந்து இந்தாண்டு ரூ.1703 கோடியாக பட்ஜெட் நிதி அதிகரித்துள்ளது. காங்., அரசு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தும் 5 சதவீதம் மட்டுமே பட்ஜெட் நிதியை உயர்த்தி வந்தது. ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு 100 கோடிக்கு மேல் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையிலும் முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு நிதி தரவில்லை என பொய்யான காரணத்தை பரப்பி வருகிறார்.ஆனால் புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் அளவுக்கு அதிகமாக ஆட்கள் நியமனம், நிர்வாக திறமையின்மை, மக்கள் நலனில் அக்கறை இல்லாத நிலை போன்றவற்றால் இந்த அரசு செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள நிதியை முறைப்படுத்த தெரியாத முதல்வர் மத்திய அரசை குறை சொல்லுவது ஏற்க முடியாது.இந்தாண்டு புதுச்சேரி வசதிக்காக பா.ஜ., சார்பில் மத்தியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியது. அதற்கேற்ப மத்திய அரசு கூடுதல் நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.இந்தாண்டு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்து, அரசின் அனைத்து நிலுவையில் உள்ள கூட்டுறவு தொழிலாளர்கள், மில் ஊழியர்கள், சம்பளம், ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளம், பாண்லே ஊழியர்கள் நிலுவை தொகை என அனைத்திற்கும் இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். மேலும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அரிசிக்கு பதில் பணமாக ரூ. 3,000 அனைவரது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.புதுச்சேரியில் நிதி பற்றாக்குறை ஏற்பட காரணம் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆடம்பர செலவே காரணம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X