சுடுமண் சிற்பக்கலை சொற்பொழிவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுடுமண் சிற்பக்கலை சொற்பொழிவு

Added : பிப் 09, 2020
Share
 சுடுமண் சிற்பக்கலை சொற்பொழிவு

புதுச்சேரி:புதுச்சேரி மண்டல இந்திரா காந்தி தேசியக்கலை மையம் சார்பில் தென்னிந்திய பாரம்பரிய சுடுமண் சிற்பக்கலை குறித்த பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முனுசாமியின்சொற்பொழிவு நிகழ்ச்சி அரபிந்தோ ஆசிரமத்தில் நேற்று நடந்தது.
அரபிந்தோ ஆசிரம மாத்ரிபிரசாத், மகாபலிபுரம் சிற்பி திருஞானம் வாழ்த்தி பேசினர். இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் புதுச்சேரி மண்டல இயக்குனர் கோபால், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்ற முனுசாமியின் திறன் மற்றும் அவரின் அயராத உழைப்பையும் சுட்டிக்காட்டி பேசினார்.இதில், முனுசாமி, தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த கலைகளுள் ஒன்றான சுடுமண் சிற்பத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு குறித்த பேசினார். தொடர்ந்து, களிமண்ணாலான பாரம்பரியமிக்க கலைப்பொருட்களை செய்வது குறித்த செயல் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, முனுசாமியின் பாரம்பரிய கலை வாழ்வை பற்றிய புகைப்படங்கள் மற்றும் சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், மாணவர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இந்திரா காந்தி தேசிய மைய திட்ட உதவியாளர் ஓவியர் ராஜா செய்திருந்தார். மைய கணக்கு அதிகாரி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X