பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களில் தைப்பூசம்

Added : பிப் 09, 2020
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு குப்பா செட்டி மலை அருகே உள்ள
கன்னிமார் கோயிலில் தைப்பூச வழிபாடு நடந்தது.

அதிகாலை முதல் சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, பெருமாள், கன்னிமார், லாடசந்நியாசி உளளிட்ட தெய்வங்கள் அலங்காரத்தில் காட்சியளித்தனர். சிறப்பு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

* ராஜபாளையம் மொட்டை மலை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அன்னதானம் வழங்கப்பட்டது.இது தவிர மாயூரநாத சுவாமி திருக்கோயில் சஞ்சீவி மலை குமாரசாமி திருக்கோயில், அம்பல புளிபஜார் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சொக்கர் கோயில், மற்றும் முடங்கியாறு ரோடு சித்தி விநாயகர் கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார்

ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாதசுவாமி கோயிலில் தைப்பூசவிழா நடந்தது.இதை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு கோயிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷங்கள் மற்றும்பூஜைகளை ரகு பட்டர் நடத்தினர். திரளான பக்தர்கள் தரிசனம்
செய்தனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.

* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்பிரமணியசுவாமிக்கு தைப்பூச சிறப்பு
பூஜைகள், சிறப்புடன் நடந்தது வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு பல்வகை
மங்கலபொருட்களால் அபிேஷகம்,சஷ்டிபாராயண வழிபாடும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீபராதனை வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள்
தரிசனம் செய்தனர்.

சாத்துார்

வெம்பக்கோட்டை துலுக்கன்குறிச்சி வாழைமரபாலகப்பிரமணியன் சுவாமி கோவிலில் தை பூசம் விழா நடந்தது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. முருகபக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X