டெங்கு விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

டெங்கு விழிப்புணர்வு

Added : பிப் 09, 2020
Share
 டெங்கு விழிப்புணர்வு

புதுச்சேரி:அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி,வீராம்பட்டினம், சிங்காரவேலர் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சகாயம் மேரி வரவேற்றார். கிராமப்புற செவிலியர் தனலட்சுமி, ஆசிரியர் ரத்தினவேல், உதயசங்கர் முன்னிலை வகித்தனர். சுகாதார உதவி ஆய்வாளர் பிரகாஷ்டெங்கு நோய்பரவும் விதம் குறித்தும், மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார்.சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன், டெங்கு உலர் நாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தை சுற்றிலும் உள்ள தேவையற்ற பொருட்களான தேங்காய் மட்டை, ஆட்டுரல், பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவை மாணவர்கள் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தினர்.ஏற்பாடுகளைகிராமப்புற செவிலியர் கருமாரிமற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.ஆசிரியர் சைமன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X