பொது செய்தி

இந்தியா

தேசிய குடல் புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : பிப் 09, 2020
Advertisement
 தேசிய குடல் புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி:முத்தியால்பேட்டை சுகாதாரம் மற்றும் நலவழி மையம் சார்பில் தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவ அதிகாரி செல்வி,சித்த மருத்துவர் சாந்தி தலைமை தாங்கி, கொரானோ வைரஸ் குறித்து பேசினர். மகப்பேறு செவிலியர்கள் ராஜலட்சுமி, ஸ்ரீதேவி, அனுஷ்யம்மா முன்னிலை வகித்தனர்.சுகாதார ஆய்வாளர் சரவணன், குடல்புழு நீக்க நாள் குறித்தும், சுகாதார உதவி ஆய்வாளர் ஜவஹர், கை கழுவும் முறை குறித்தும், சுகாதார உதவி ஆய்வாளர்கள் ரேணுகாதேவி, ரங்கநாதன் ஆகியோர் மாணவர்கள் மாத்திரை உட்கொள்ளும் முறை, கொடுக்கும் அளவு குறித்து விளக்கம் அளித்தனர்.முன்னதாக, மகப்பேறு செவிலியர் ராஜேஸ்வரி வரவேற்றார். செவிலியர்கள் சுகன்யா, சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X