பொது செய்தி

இந்தியா

கார்ப்பொரேஷன் வங்கியில் சிறப்பு கடனுதவி முகாம்

Added : பிப் 09, 2020
Advertisement
 கார்ப்பொரேஷன் வங்கியில் சிறப்பு கடனுதவி முகாம்

புதுச்சேரி:கார்ப்பொரேஷன் வங்கி சிறப்பு கடனுதவி முகாமில் ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக திருச்சி மண்டல முதன்மை மேலாளர் குமரேசன் தெரிவித்தார்.
கார்ப்பொரேஷன் வங்கி புதுச்சேரி மற்றும் அரும்பார்த்தபுரம் கிளை சார்பில் பண்டிகைக்கால ஒரு நாள் சிறப்பு கடனுதவி முகாம், புதுச்சேரி நுாறடி சாலை இந்திரா சிக்னல் அருகே உள்ள சவிதா பிளாசாவில் அமைந்துள்ள புதுச்சேரி கிளையில் நேற்றுநடந்தது.முகாமை வங்கியின் உதவி பொது மேலாளர் விசுகுமாரா, திருச்சி மண்டல முதன்மை மேலாளர் குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து நடந்த முகாமில் வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்து கடனுதவி அனுமதி அளித்தனர்.
கடனுதவி முகாம் குறித்து திருச்சி மண்டல முதன்மை மேலாளர் குமரேசன் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதில் இந்தியா அளவில் கார்ப்பரேஷன் வங்கி முன்னோடியாக உள்ளது. வாடிக்கையாளர்களின் ஆவணங்களை உடனுக்குடன் சரிபார்த்து அவர்களுக்கு அலைச்சல் இல்லாமல் குறைந்த வட்டியில்கடன் உதவி வழங்கி வருகிறது.இந்த முகாமில் தனிநபர் கடனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 100 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு கடனாக குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலும், வாகன கடனாக ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் பெறலாம்.விழாக்கால சலுகையாக மார்ச் 31ம் தேதி வரை பரிசீலனைக் கட்டணம் ஏதும் கிடையாது. மருத்துவ கடன், வியாபாரக் கடன் ஆகியவற்றிற்கும் குறைந்தபட்ச வட்டி விகிதமே உள்ளது. பிற வங்கியில் இருந்து கடன்களைகார்ப்பரேஷன் வங்கிக்கு மாற்றும் வசதியும் உள்ளது.பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் வரை மானியம் பெற முடியும். அதற்கான வழிகாட்டுதல்களையும் முகாமில் விளக்கம் அளிக்கின்றோம்.சொந்த வீடு, சொந்த வாகனம் கனவில் இருப்பவர்கள், அதனை நனவாக்கி கொள்ளகார்ப்பரேஷன் வங்கி சிறந்த சாய்ஸ்.வருமான சான்றிதழ், ஆதார், பான் கார்டு, வங்கி பாஸ்புக் ஆகியவற்றுடன் அணுகி எளிதில் கடனுதவி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X