செயின் பறிப்பு டிப்டாப் பெண்களுக்கு போலீஸ் வலை

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:கோவில்களில் நடந்த பிரதோஷ பூஜையில் இரு பெண்களிடம் 18 சவரன் தங்க செயின்களை பறித்து சென்ற டிப்டாப் பெண்களை தேடி தனிப்படை போலீசார் திருச்சி விரைந்துள்ளனர்.
லாஸ்பேட்டை, சாந்தி நகரைச் சேர்ந்தவர் கங்காதரன் மனைவி லதா, 52; இவர் கடந்த 6ம் தேதி மாலை, காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பிரதோஷ பூஜையை முடித்துக் கொண்டு மாலை 5:45 மணிக்கு வெளியே வந்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி செயின் மாயமாகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதேபோன்று, கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் பங்கேற்ற, லாஸ்பேட்டை காமராஜர் சாலை, செந்தாமரை நகர் சுப்ரமணியன் மனைவி தங்கம்,65; சாமியை தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தார்.அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை யாரோ இழுப்பதை உணர்ந்த தங்கம், திரும்பியபோது, அவரை சுற்றி நின்றிருந்த டிப்டாப் பெண்கள் நான்கு பேரும் அவசர அவசரமாக வெளியேறினர். கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயின் திருடு போயிருந்தது.
இச்சம்பவங்கள் குறித்து லதா மற்றும் தங்கம் கொடுத்த புகார்களின் பேரில் முறையே பெரியக்கடை மற்றும் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் திருச்சி விரைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-பிப்-202014:48:24 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிடிச்சாள் ப்ளீஸ் வெறும் சிறைவாசம்போராது முதல்ல கைகளைவெட்டுங்க போலீசு சோறுதுன்னா கழுவிக்கவும் கைகளே இல்லாது தவிக்கவேண்டும் இளந்தவாளுக்குத்தான் தெரியும் அதுபோல காலம் கேட்டுக்கிடக்கே என்னாதுக்குஇவ்ளோகாஸ்டலியாணகைகள் மாட்டிண்டுவாறீங்க லேடீஸ்களா முழிச்சுண்டுருக்கமுண்டாம் திருடி பாக்கபாக்க பண்டம் திருடின்னுவா அதுபோல இருக்காளுக திருட்டு மூதேவிகளும் ஆன் /பெண் பேதமே இல்லீங்க கள்ளம்பண்ணால் இதுதான் தண்டனை பசிக்கு பன்ரொட்டி திருடினால் கூட தப்புதான் ஆனால் இதுகளோ ஆத்மபாரமா வாழவேதான் கள்ளம் பண்ணுறாளுக தேவையில்லாத இந்த கொள்ளையர்களை சுட்டு தள்ளவும் தப்பே இல்லீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X