பொது செய்தி

இந்தியா

முதலியார்பேட்டையில் தைப்பூச ஜோதி தரிசன விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 முதலியார்பேட்டையில்  தைப்பூச ஜோதி தரிசன விழா

புதுச்சேரி:முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்தது.
முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 71ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 6ம் தேதி, வள்ளலார் திருஉருவப்பட ஊர்வலம் நடந்தது. 7 ம் தேதி காலை அகவல் உணர்ந்தோதுதல், சுத்த சன்மார்க்க கொடியேற்றுதல் நடந்தது. அதைத் தொடர்ந்து, கடலுார் பேராசிரியர் குழந்தைவேலனார், திருநாகலிங்கம், அருணகிரி, புதுச்சேரி தலைமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் கணேசன், தலைமை சங்க செயலர் சீத்தாலட்சுமி ஆகியோரின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.அதைத் தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு, அகவல் உணர்ந்தோதுதல், காலை 8:00 மணிக்கு ஏழு திரை நீங்கிட ஜோதி தரிசன வழிபாடும், 9:00 மணிக்கு திருவருட்பா வீணை இசை நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 1:00 மணிக்கு மீண்டும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.நிகழ்ச்சியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், ஆனந்து, புனிதா, வெற்றிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜோதி தரிசன விழாவையொட்டி, காலை 11:00 மணி முதல் அன்னதானம் நடந்தது.லாஸ்பேட்டை முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி, சிறப்பு அபிேஷக ஆராதனை, சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X