பொது செய்தி

இந்தியா

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம் பெற புதுச்சேரிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement
 யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம் பெற புதுச்சேரிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது

புதுச்சேரி:புதுச்சேரி நகரம் யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது என தலைமை செயலர் அஸ்வனி குமார்பேசினார்.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராம அமைப்புத் துறை, நகர அமைப்பு குழுமம், இன்டாக் சார்பில் புதுச்சேரி பாரம்பரிய பாதுகாப்பு யுனெஸ்கோ நியமனத்திற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி நகரம் மற்றும் கிராம அமைப்பு துறை செயலர் மகேஷ் வரவேற்றார். இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான யுனெஸ்கோ இயக்குனர் எரிக் பல்ட், உலக பாரம்பரிய நகரத்திற்கான அங்கீகாரம் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் அகமதாபாத் இடம் பெற்ற விபரங்களை கட்டட கலை நிபுணர் ரபிந்திரா வசவாடா பகிர்ந்தார். புதுச்சேரியில் இன்டாக் மூலம் செய்யப்படும் பணிகளை கன்வீனர் அசோக் பாண்டா, அருள்ஆகியோர் கலந்துரையாடினர். கருத்தரங்கில் புதுச்சேரியில் உள்ள தொண்டு நிறுவனங்கள், பாரம்பரிய ஆர்வலர்கள் பல்வேறுசந்தேகங்களைஎழுப்பினர்.
கருத்தரங்கில், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் பேசியதாவது:புதுச்சேரி நகரம் யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. பாரம்பரிய பட்டியலில் புதுச்சேரி நகரம்இடம் பெறுவது என்பது வெறும் கட்டடங்களை மட்டும் குறிப்பது கிடையாது. மனிதர்கள் வாழும் சூழல், துாய்மை என எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
புதுச்சேரியில் தண்ணீர் வளம் இல்லை என்று சொல்ல முடியாது. பருவமழை நன்றாக பெய்கிறது. அந்த மழை நீரை சேமிப்பது நமது கடமை. நகரில் ஒயிட் டவுன், பிளாக் டவுன் என்ற பாகுபாடு ஏதும் இல்லை. அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைந்தவளர்ச்சி தான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் அருண்மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X