பொது செய்தி

இந்தியா

தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 09, 2020
Advertisement
 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி:வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று நடந்த தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புமுகாமில் 750 பேர் பங்கேற்றனர்.
படித்த இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில், காந்தி நகர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று நடந்த இந்த முகாமில், வெர்ல்புல், சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், பீ வெல் ஹாஸ்பிடல் உள்ளிட்ட 10 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமை, தொழிலாளர் ஆணையரும், வேலைவாய்ப்பு இயக்குனருமான வல்லவன் பார்வையிட்டார்.முகாமில் பி.இ., பி.டெக்., டிகிரி மற்றும் டிப்ளமோ, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் என, 750 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில், 259 பேர் அடுத்தக்கட்ட இன்டர்வியூவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். 25 பேருக்கு முகாமிலேயே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை, வேலைவாய்ப்பு அதிகாரி ஜோஸ்பின் சித்ரா மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X