இந்தியா

எச்சரிக்கை! தொழில் உரிமம் புதுப்பிக்காமல் வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு..களம் இறங்கும் நகராட்சி ஆணையர்.

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement
 எச்சரிக்கை! தொழில் உரிமம் புதுப்பிக்காமல் வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு..களம் இறங்கும் நகராட்சி ஆணையர்.

புதுச்சேரி:'தொழில் உரிமம் இல்லாமலும், தொழில் உரிமத்தை புதுப்பிக்காமலும் வியாபாரம், தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார்எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி நகராட்சி எல்லைக்குள் நகராட்சியின் தொழில் உரிமம் பெறாமலோ அல்லது நடப்பு ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்காமலோ வியாபாரம், தொழில் செய்பவர்கள், உடனடியாக விண்ணப்பித்து தொழில் உரிமத்தை பெற்றுக் கொள்ளுமாறும், ஏற்கனவே பெறப்பட்ட தொழில் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும், வரும் 2020 -21ம் நிதியாண்டிற்கான (வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்திற்கு) தொழில் உரிமத்தை, வரும் 28ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொண்டு, வணிக உரிமத் தொகையில் 25 சதவீதம் வசூலிக்கப்படும் காலதாமதக் கட்டணத்தை தவிர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.தொழில் உரிமம் இல்லாமலோ அல்லது புதுப்பிக்கப்படாமலோ தொடர்ந்து வியாபாரம், தொழில் செய்பவர்கள் மீது புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வியாபாரம், தொழில் செய்வது தடை செய்யப்படும். மேலும், எந்த ஒரு வியாபார நிறுவனங்களுக்கும் புதுச்சேரி நகராட்சி தொழில் உரிமத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.வணிக நிறுவனங்களின் நலன் கருதி, பிப்ரவரி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும், எண் 1, சுய்ப்ரேன் வீதியில் உள்ள வருவாய் அலுவலகம் பிரிவு-2ல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X