பொது செய்தி

தமிழ்நாடு

சேது பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Added : பிப் 09, 2020
Advertisement

காரியாபட்டி:காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா நிறுவனர்
முகமது ஜலீல் தலைமையில் நடந்தது.

முதன்மை நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர், நிர்வாக இயக்குனர்கள் நிலோபர் பாத்திமா, நாஸியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர்
செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.திருவனந்தபுரம் தொழில்நுட்ப தேசிய நிறுவன முதன்மை விஞ்ஞானி பிரவீன்ராஜ் பட்டம் வழங்கி பேசியதாவது:

மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களின் கண்டுபிடிப்பை வியாபாரம் ஆக்காமல் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அதிக வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். கல்லுாரி என்பது மாணவர்களை பக்குவப்படுத்தும்
நிலையம்.

இங்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு எதிர்காலத்தை வளமாக்கி சம்பாதிப்பதோடு சமுதாயத்திற்கு தேவையான நன்மைகளை செய்ய வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி முதன்மை அதிகாரிகளாக வர வேண்டும். றியாளர்கள் தெளிவான சிந்தனையுடன் இருந்தால் எதையும் எளிதாக மேற்கொள்ள முடியும், என்றார்.துணை முதல்வர் சிவக்குமார், டீன் ஷாநவாஸ் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X