வாலிபரை கொலை செய்ய திட்டம் வெடிகுண்டுகளுடன் 6 பேர் கைது

Added : பிப் 09, 2020
Share
Advertisement

புதுச்சேரி:வாலிபரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டு மற்றும் மூன்ற கத்திகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெனார்த்தனன்,28; சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஆர்.பி., போலீஸ்காரர் ஜெகனின் சகோதரர். இவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளது. இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 9ம் தேதி இரவு, கருவடிக்குப்பம், நாகம்மன் நகர், வள்ளலார் வீதியில் உள்ள தனது சகோதரி ஜெயஸ்ரீ வீட்டிற்கு பைக்கில் சென்றபோது, நாகம்மன் கோவில் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள், திடீரென ஜனார்த்தனன் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். அது, கடையின் சுவற்றில் பட்டு வெடித்தது.இது தொடர்பாக, லாஸ்பேட்டை சரத்குமார், ஜெயநாதன், சுபாஷ், ஆனந்த், வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஐந்து பேரும், ஜெனார்த்தனனின் கூட்டாளியான சுகுமாரை கொலை செய்ய திட்டமிட்டனர்.இதனை அறிந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஜெயநாதனின் கூட்டாளியான நாவற்குளம் மண்டமணி,28; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், ஜனார்த்தனன் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரது கூட்டாளி சுகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருப்பது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமினில் வந்துள்ள கருவடிக்குப்பம், பொன்னியம்மன் கோவில் தெரு ஜெயநாதன் (எ)மணிகண்டன்,25; பிள்ளையார்கோவில் தெரு சுபாஷ் (எ) காத்தவராயன்,24; சாரம், வெங்கடேஸ்வரா நகர், பெருமாள்,27; எடையன்சாவடி சாலை, வினோத், 25; கருவடிக்குப்பம் லோக்கேஷ்,25; மற்றும் மண்டமணி. ஆகியோரை கைது செய்தனர். மேலும், சுகுமாரை கொலை செய்வதற்காக லட்சுமி நகர் குளம் அருகே பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் மூன்று கத்திகளை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X