தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி

Added : பிப் 09, 2020
Share
 தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி

புதுச்சேரி:தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியினை உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை இணைந்து தைத்திருவிழா தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் துவங்கியது.விழாவை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். இரண்டாவது நாளாக நேற்று மலர் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில், 25 ஆயிரம் செடிகள், மலர்கள் மற்றும் காய்கறி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும், திராட்சையால் செய்யப்பட்ட மாடு, பூக்களை கொண்டு செய்யப்பட்ட வீணை, மான் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்தன. கண்காட்சியினை புதுச்சேரி மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X