லோக் அதாலத்தில் 710 வழக்குகள் சுமூக தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement
 லோக் அதாலத்தில் 710 வழக்குகள் சுமூக தீர்வு

புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 710 வழக்குகள் சுமூக தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரான மாவட்ட நீதிபதி சோபனாதேவி வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவரான தலைமை நீதிபதி தனபால் தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலரான முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடிரமேஷ், வழக்கறிஞர் சங்க தலை வர் முத்துவேல், செயலர் தாமோதரன், அரசு வழக்கறிஞர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதற்காக, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணையத்தில் ஒரு அமர்வும், காரைக்கால், மாகி, ஏனாமில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 13 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டது.இதில், சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், சிவில் வழக்கு, வங்கி கடன், ஜீவனாம்சம் மற்றும் குடும்ப பிரச்னை உள்ளிட்ட 4,672 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 710 வழக்குகள் ரூ. 5 கோடி, 23 லட்சத்து, 29 ஆயிரத்து 935 மதிப்பிலான தொகைக்கு தீர்வு காணப்பட்டது.காரைக்கால்நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத் தில் 58 வழக்குகளில் சுமூக தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X