பொது செய்தி

இந்தியா

பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

புதுச்சேரி:இரும்பை பாலாதிரிபுரசுந்தரி அம்பாள் கோவில் 7ம் ஆண்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில், இரும்பை, டோல்கேட் அருகே குபேரன் நகரில், பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் 7ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, 108 திரவ்ய கலச ஸ்தாபனம், வேதிகார்ச்சனை, மூல மந்திர ஜபம் ஹோமம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு, கோ பூஜை, வேதிகார்ச்சனை, மூல மந்திர ஹோமம், மகா அபிேஷகம், பூர்ணாஹூதி, கலசாபிேஷகம், பாலா திரிபுரசுந்தரி அம்பாள் நெய்வேத்திய உபசாரம், தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு, மூலவர் சிறப்பு அலங்காரமும், நவசக்தி அர்ச்னை, தீபாராதனை, உற்சவர் ஆலய உள்புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் தலைவர் ராமமூர்த்தி, துணை தலைவர் சீனுவாசன், செயலர் கணேஷ் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X