பொது செய்தி

இந்தியா

பாரத் பள்ளியில் அறிவியல் பூங்கா இஸ்ரோ விஞ்ஞானி திறந்து வைத்தார்

Added : பிப் 09, 2020
Share
Advertisement
வில்லியனுார்:ஊசுட்டேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் பாரத் கல்வி குழும தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., வழிகாட்டுதலின் பேரில், கல்வி குழுமத்தின் செயலர் சந்தீப்ஆனந்த் மற்றும் நிர்வாக இயக்குனர் சுவேதா ஆகியோர் மேற்பார்வையில் பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தகவல் தொடர்பாளர்
 பாரத் பள்ளியில் அறிவியல் பூங்கா இஸ்ரோ விஞ்ஞானி திறந்து வைத்தார்

வில்லியனுார்:ஊசுட்டேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் பாரத் கல்வி குழும தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., வழிகாட்டுதலின் பேரில், கல்வி குழுமத்தின் செயலர் சந்தீப்ஆனந்த் மற்றும் நிர்வாக இயக்குனர் சுவேதா ஆகியோர் மேற்பார்வையில் பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தகவல் தொடர்பாளர் செல்வம் வரவேற்றார். இஸ்ரோ முன்னாள் தலைமை விஞ்ஞானி நெல்லை முத்து பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சாமிக்கண்ணு -- லட்சுமி அம்மாள் நினைவு அறிவி யல் பூங்காவை திறந்து வைத்தார்.சாரண சாரணிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், பள்ளி யில் சாரண சாரணிய அமைப்பை துவங்கிவைத்தார். புதுச்சேரி தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அகில்நாயர் நாணயம் மற்றும் தபால் தலை கண்காட்சியை துவக்கி வைத்தார்.பள்ளியில் துவங்கிய அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் 250க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றது. கண்காட்சியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.நிகழ்ச்சியில் வேளாண் விஞ்ஞானிகள் வேங்கடபதி, லட்சுமி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதுநிலை முதல்வர் மணி விஜயராகவன், நிர்வாக அதிகாரி பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.பள்ளி முதல்வர் பியு பண்டோபாத்யாய் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X