சடன் பிரேக்கால் வாலிபர் பலி  

Added : பிப் 09, 2020
Advertisement

புதுச்சேரி:பைக்கில் சடன் பிரேக் போட்டதில் தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரி சண்முகாபுரம், நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (எ) ராஜி, 29; பாண்லே நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். திருமணமாகி இரண்டாண்டாகும் இவருக்கு குழந்தை இல்லை.கடந்த 4 ம் தேதி, தனது பைக்கில் வழுதாவூர் சாலையில், தட்டாஞ்சாவடியில் இருந்து சண்முகாபுரம் நோக்கி சென்றார். ராணி மருத்துவமனை அருகே சென்றபோது, தனது பைக்கில் இருந்து விழுந்த பொருளை எடுக்க 'சடன் பிரேக்' பிடித்தார். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X