பொது செய்தி

இந்தியா

பணப்பையை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டு

Added : பிப் 09, 2020
Advertisement
 பணப்பையை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டு

வில்லியனுார்:வில்லியனுார் புறவழிச்சாலையில் கீழே கிடந்த ரூ. 25 ஆயிரம் பணப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது கத்தார். சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.இவரது மகன் முகமது சாதிக் அலி,14; சுல்தான்பேட்டையில் உள்ள காயிதேமில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.வில்லியனுார் புறவழிச்சாலை மூலக்கடை எம்.ஜி.ஆர்., சிலை அருகே நடந்து சென்றபோது, சாலையில் கிடந்த துணிப்பையை எடுத்து பார்த்தார். அதில், இருந்த மணிபர்சில் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன் அந்த பணப்பையை அருகில் பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் ஒப்படைத்தார்.அவர், பர்சில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, உரியவர் பணத்தை பெற்றுக்கொள்ள அறிவித்தார்.அதன்பேரில் பணத்தை தேடி வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன் மனைவி பரமேஸ்வரி என்பதும், கணவர் நாராயணன் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்கு வீட்டில் இருந்து உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது மூலக்கடை எம்.ஜி.ஆர்., சிலை அருகே கார் பழுதாகி நின்றுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்ல காரில் இருந்து இறங்கி அவசரமாக ஒரு ஆட்டோவில் ஏறியபோது பணப்பை தவறியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணத்தை பரமேஸ்வரியிடம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஒப்படைத்தார்.பரமேஸ்வரி தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவர் முகமது சாதிக் அலியின் நேர்மையை பாராட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் பணத்தை தவற விட்ட பரமேஸ்வரி ஆகியோர் மாணவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். மாணவரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X