துறைமுகத்தில் சுற்றுலா திட்டங்கள்: அமைச்சர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

துறைமுகத்தில் சுற்றுலா திட்டங்கள்: அமைச்சர் ஆலோசனை

Added : பிப் 09, 2020
Share
புதுச்சேரி:புதுச்சேரி துறைமுகத்துடன் இணைந்த சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தலைமைச் செயலக கருத்தரங்கக் கூடத்தில் நடந்த கூட்டத்துக்கு, துறைமுகத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் -மற்றும் துறைமுகத் துறை செயலர் அன்பரசு, கலெக்டர் அருண், சுற்றுலாத் துறை செயலர் பூர்வா கார்க், அறிவியல்

புதுச்சேரி:புதுச்சேரி துறைமுகத்துடன் இணைந்த சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தலைமைச் செயலக கருத்தரங்கக் கூடத்தில் நடந்த கூட்டத்துக்கு, துறைமுகத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் -மற்றும் துறைமுகத் துறை செயலர் அன்பரசு, கலெக்டர் அருண், சுற்றுலாத் துறை செயலர் பூர்வா கார்க், அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் அர்ஜூன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், சுற்றுலா, துறைமுகம், பொதுப்பணி ஆகிய துறைகளும், ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பழைய துறைமுக பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கம், சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர், துறைமுகத்துறை செயற்பொறியாளர் ஜெகஜோதி, சப் கலெக்டர் சுதாகர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X