மேல்நிலைத்தொட்டிகளில் வலுவிழந்த தூண்கள் பராமரிக்க கோரிக்கை

Added : பிப் 09, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியத்தில் பரவலாக மேல்நிலைத் தொட்டிகளின் துாண்கள்
விரிசலடைந்து காணப்படுவதால் பணியாளர்கள் தொட்டியில் ஏறி பராமரிப்புப் பணிகளை
மேற்கொள்ள தயங்குகின்றனர்.

திருப்புத்துார் கிராமங்களில் குடிநீர் திட்டத்திற்காக மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பல தொட்டிகளைத் தாங்கும் துாண்கள் பழுதடைந்து விரிசலடைந்தே காணப்
படுகின் றன.போதிய தரமில்லாமல் கட்டப்படுவதால் எளிதாக சிமென்ட் கான்கிரீட் காரை பெயர்ந்து விழுந்து விடுகிறது. இதனால் துாண்களில் பல இடங்களில் கம்பிகள் வெளியே
தெரிகின்றன. இதனால் பணியாளர்கள் ஏணியில் ஏறி தொட்டியை சுத்தப்படுத்ததயங்கும் நிலை உள்ளது.

இதனால் பல குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் பராமரிப்பின்றியேகுடிநீர் தேக்கப்பட்டு
வினியோகிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் சுகாதாரக் கேட்டைத் தவிர்க்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கிராமங்களிலுள்ளமேல்நிலைத்தொட்டிகளை ஆய்வு செய்து கோடை காலம்
துவங்கும் முன்னர் வலுவிழந்து வரும் துாண்களை கண்டறிந்து பராமரிக்க வேண்டியது
அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X