சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 75 பேர் மீது வழக்குப் பதிவு

Added : பிப் 09, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரத்தில் எஸ்.டி.பி.ஐ., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 75 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொதுச்செயலர் முகமது ரபி தலைமை தாங்கினார். பொருளாளர் சான்பாஷா வரவேற்றார். துணை தலைவர் சாதிக்பாஷா, மாவட்ட செயலர் சையத் ஹசன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் சாதிக்பாஷா, கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுச்செயலர் அஸ்லாம் பாஷா கண்டன உரையாற்றினர்.டில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் டில்லி ஷாஹின்பாக்கில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.அதனைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட செயலர் ரபீக் உட்பட 75 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X