பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.61.10 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு பூமி பூஜையுடன் பணிகள் துவங்கியது

Added : பிப் 09, 2020
Advertisement
 ரூ.61.10 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு பூமி பூஜையுடன் பணிகள் துவங்கியது

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி பேரூ ராட்சியில் திறந்த வெளி கிணறு அமைக்க பூமி பூஜை நடந்தது.
விக்கிரவாண்டி பேரூராட்சி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் அமைச்சர் சண்முகம் பரிந்துரையில் திறந்த வெளி கிணறு அமைக்க 61.10 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், திட்ட இயக்குனர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். வங்கித் தலைவர், அ.தி.மு.க., நகர செயலர் பூர்ணராவ் வரவேற்றார்.விழாவில் அமைச்சர் சண்முகம் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த 2 பேட்டரி வாகனங்களை பேரூராட்சிக்கு வழங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் முத்தமிழ்ச்செல்வன், சக்கரபாணி, பேரூராட்சி செயல் அலுவலர் விழிச்செல்வன், தாசில்தார் பார்த்திபன், ஒன்றிய செயலர்கள் பன்னீர், முகுந்தன், சுரேஷ்பாபு, முருகன், வங்கித் தலைவர்கள் சரவணகுமார், வாசு பிரகாஷ், மாறன், துணைத் தலைவர்கள் சங்கர், ராஜாங்கம், ஓம் சக்தி, செங்கல்வராயன், இயக்குனர்கள் பலராமன், சுப்ரமணி, துரைமுருகன், தேவராஜ், கண்ணன், வாசு, அய்யனாரப்பன், இளைஞரணி வழக்கறிஞர் பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் அமுதா ஜெயராமன், இணைச் செயலர் பிச்சையம்மாள் பூவன், மேற்பார்வையாளர் தண்டபாணி, மேஸ்திரி ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X