பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா

Added : பிப் 09, 2020
Advertisement
 வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா

விழுப்புரம்:விழுப்புரம், வள்ளலார் அருள்மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்திய டிரஸ்ட் சார்பில், 149வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடந்தது.
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள வள்ளலார் அருள்மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், 79வது ஆண்டாக வடலுாரில் நடைபெறும் அதே காலநேர முறைப்படி, 7 திரைகள் நீக்கி 6 கால ஜோதி தரிசனம் நடந்தது.நேற்று காலை 6.00 மணி, 10.00, மதியம் 1.00, இரவு 7.00, 10.00 மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அருள்மாளிகை நிர்வாகிகள் அண்ணாமலை, கலியபெருமாள், பலராமன், பாரதி, ராஜபூபதி, சரவணபவன், ராமலிங்கம், அழகானந்தன், பன்னீர்செல்வம், வேல்முருகன், அருளரசு சீத்தாராமன், வாசுதேவன், ஜெயக்குமார் செய்திருந்தனர்.இதேபோன்று, விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, அரசு மருத்துவமனை அருகே உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 7.00 மணிக்கு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் ஸ்ரீ வள்ளி, தேவசேனாவோடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மயிலம்மயிலம் மலையடிவாரத்தில் உள்ள அக்னி குளக்கரையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து காவடி பூஜை செய்து, நேற்று காலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 11:00 மணிக்கு தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.பின்னர் விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. மதியம் 12;00 மணிக்கு 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.திருக்கோவிலுார்திருக்கோவிலுார் ஞானானந்த நிகேதனில் தைப்பூச விழா நடந்தது.பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களின் தவத்திற்கு இசைந்து சிவபெருமான் நடனம் புரிந்த நாள் தைப்பூசத் திருநாள். இந்நாளை சித்தர்கள் நினைவு கூறும் நாளாக கொண்டாடி வருகின்றனர்.உலகில் வேற்றுமைகள் நீங்கி பேரன்புடன் அமைதி நிலவ நிகேதன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நித்தியானந்த கிரி சுவாமிகள் சிறப்பு பிரார்த்தனையுடன் சத்சங்க மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பிரபாவனந்த சரஸ்வதி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் சந்திரசேகர், சீனிவாசன், குருபிரசாத் மற்றும் வேதாந்த பாடம் பயிலும் இந்திய மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X