செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Added : பிப் 09, 2020
Share
 செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே மொபைல் போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்மலையனுார் வட்டம், கப்ளாம்பாடி கிராமத்தில் எதப்பட்டு செல்லும் மெயின் ரோடு அருகே தனி நபருக்கு சொந்தமான நிலப்பகுதியில் தனியார் மொபைல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.தகவல் அறிந்த கிராம மக்கள் நேற்று காலையில் அப்பகுதியில் ஒன்று கூடி, இப்பகுதியில் டவர் அமைத்தால் கதிர்வீச்சு தாக்குதலினால் ஆடு, மாடு, விவசாய பயிர்கள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படும் என பணியை மேற்கொண்டு நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X