சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நின்றிருந்த வாகனங்களுக்கு அபராதம்: போலீஸ் மீது பொதுமக்கள் அதிருப்தி

Added : பிப் 09, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:சின்னசேலம் பகுதியில் நின்றிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் உடனடியாக அபராதமாக பணம் வசூலித்து அதற்கான ரசீதுகளை வழங்குவது வழக்கமாக இருந்தது. இதில், முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.இதனையொட்டி இயந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் இ-சலான் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அனைத்து சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கும் அபராதம் விதிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் பலர், வாகன ஓட்டிகளை மடக்கி உரிய ஆவணங்கள் இருப்பினும் எவ்வித விசாரணையுமின்றி இயந்திரம் மூலம் அபராதம் விதித்து ரசீது வழங்குகின்றனர். அதேபோல், நின்றிருக்கும் வாகனங்களுக்கு ெஹல்மெட் இல்லாமலும், அதிவேகமாக சென்றதாகவும் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்கின்றனர்.சின்னசேலம் பஸ் நிலைய பகுதியில் கடையின் உரிமையாளர்கள் மற்றும் கடைகளுக்கு வந்தவர்கள் சிலர் தங்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பாக நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அபராதம் விதிப்பு இயந்திரத்துடன் சென்ற போலீசார் கடைகளின் முன்பு நின்றியிருந்த வாகனங்களின் எண்களை பதிவு செய்து ெஹல்மெட் இல்லாமலும், அதிவேகமாகவும் சென்றதாகவும் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளனர்.நின்றிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசாரின் அடாவடி நடவடிக்கைகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியடைய செய்தது. இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X