பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா சிமென்ட்' இருப்பில்லை: வால்பாறை மக்கள் பரிதவிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement
 'அம்மா சிமென்ட்' இருப்பில்லை: வால்பாறை மக்கள் பரிதவிப்பு

வால்பாறை:வால்பாறையில் அம்மா சிமென்ட் இருப்பு இல்லாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வீடுகட்டும் வகையில், அரசு சலுகை விலையில் 'அம்மா' சிமென்ட் விற்பனை செய்யப்படுகிறது.வெளிமார்கெட்டில் ஒரு மூட்டை சிமென்ட், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மா சிமென்ட், 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 'அம்மா' சிமென்ட் விற்பனை செய்யப் படுகிறது. ஆனால், வால்பாறை சிவில்சப்ளை குடோனில் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால் நாள் தோறும் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, 2015ம் ஆண்டு, 1,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கு திறக்கப்பட்டது.

அம்மா சிமென்ட் மூட்டை வைக்க போதிய இட வசதி இருந்தும், அதிகாரிகளின் அலட்சியத்தால் சிமென்ட் கொண்டு வரப்படவில்லை. இதனால், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர்,' என்றனர்.

சிவில்சப்ளை அதிகாரி குமார் கூறுகையில், 'வால்பாறையில் அடிக்கடி மாறும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கடந்த 2015 முதல் 'அம்மா' சிமென்ட் இருப்பு வைப்பது இல்லை.குறிப்பாக, மழை காலங்களில் இருப்பு வைப்பது மிகவும் சிரமம். வெயில் காலத்தில் மட்டும் சிமென்ட் மூட்டைகள் குறைந்த அளவு இருப்பு வைத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் சிமென்ட் கொண்டுவரும் எண்ணம் இல்லை,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X