பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் 'டாப்சீட்' பள்ளிகளுக்கு வினியோகம்

Added : பிப் 09, 2020
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களுக்கான 'டாப்சீட்'கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் துவங்குகிறது.

தேர்வு விடைத்தாள்களில், மாணவர்களின் விபரங்கள் உள்ளடங்கிய 'டாப்சீட்' இணைக்கப் படுகிறது. உடுமலை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1, 2 பொதுத்தேர்வில், ஒவ்வொரு வகுப்பிலும் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். விடைத் தாள்களில், 'டாப்சீட்' இணைப்பதற்கு, திருப்பூர் மாவட்டத்திலிருந்து, உடுமலை கல்வி மாவட்டத்தில் குறிப்பிட்ட பள்ளிகளை மையமாகக்கொண்டு 'டாப்சீட்'கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், மாணவர்களின் புகைப்படம், தேர்வு மையம், தேர்வு பாடம், தேர்வு எண், உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அச்சிடப்பட்டுள்ளன. உடுமலை நகரில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 'டாப்சீட்'கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளி மற்றும் பாட ஆசிரியர்கள் மூலம், நாளை, முழுவதுமாக 'டாப்சீட்'கள் சரிபார்க்கப்படுகிறது.

மாவட்ட கல்வித்துறையிலிருந்து, 10 மற்றும் 11ம்தேதிகளில், உடுமலை கல்வி மாவட்டத்துக் கான தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்னர், இப்பள்ளிகளில், விடைத் தாள்களுடன் 'டாப்சீட்' இணைக்கும் பணிகள் துவங்குகிறது. இம்முறை, பிளஸ் 1, 2 தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வேறு வண்ணங்களில் 'டாப்சீட்'கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X