பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு ஆர்வம் அதிகரிப்பு பள்ளி மாணவர்கள் ஊக்குவிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement
 விளையாட்டு ஆர்வம் அதிகரிப்பு பள்ளி மாணவர்கள் ஊக்குவிப்பு

ஆனைமலை:கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, விளையாட்டு போட்டிகள் நடந்தது.

கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், அரசு பள்ளிகளுக்கு இடையேயான 'கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் மீட்' நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கிருபாசங்கர் துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் பிரதீப், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், பிரபாகரன் தலைமையில் போட்டிகள் நடந்தது.இதில், நரிக்கல்பதி நடுநிலைப்பள்ளி, கோட்டூர் உருது துவக்கப்பள்ளி, ஆழியாறு அரசுப்பள்ளி உள்பட, எட்டு பள்ளிகளில் இருந்து, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 120 மாணவர்கள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, 80 மீ., 100 மீ., நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக கபடி போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி அசத்தலாக விளையாடி வெற்றி வாகை சூடினர்.அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, கோப்பை வழங்கப்பட்டது.

உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'கிராமப்புற மாணவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை துாண்டுவதற்காக, முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களிடம் நன்கொடை பெற்று போட்டி நடத்தப்பட்டது.இதில், சிறப்பாக விளையாடும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம்.இதனால், மாணவர்களின் விளையாட்டுத்திறன் மேம்படுவதுடன், பள்ளி சேர்க்கை அதிகரிக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X