தமிழ்நாடு

சாதிப்பது நிச்சயம்! 'வெற்றிப்பாதையில் திருப்பூர்': கருத்தரங்கில் உறுதி

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement
 சாதிப்பது நிச்சயம்! 'வெற்றிப்பாதையில் திருப்பூர்': கருத்தரங்கில் உறுதி

திருப்பூர்:'திருப்பூர், ஆடை வர்த்தகத்தில், லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை நிச்சயம் நிறைவேற்றும்,' என, வெற்றிப்பாதையில் திருப்பூர் -- 2020' கருத்தரங்கில், சர்வதேச வர்த்தக ஆலோசகர் ராஜேஷ்பேடா பேசினார்.பின்னலாடை துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் 'வெற்றிப்பாதையில் திருப்பூர் -- 2020' நிகழ்ச்சி, திருப்பூர், வேலாயுதசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது.
ஏற்றுமதியாளர் சங்கம், 'நிப்ட்--டீ' கல்லுாரி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, தொழில் பாதுகாப்புக்குழுவுடன், 'தினமலர்' நாளிதழும் இணைந்து, இதை நடத்தின.இதில், டில்லி ராஜேஷ்பேடா ஆலோசனை நிறுவன இயக்குனர் ராஜேஷ் பேடா பேசுகையில், ''ஆடை வர்த்தகத்தில், மிகப்பெரிய சந்தையான இந்தியா மீது, வங்கதேசம், சீனா போன்ற நாடுகளின் பார்வை, திரும்பியுள்ளது. அந்நாடுகள், நமது நாட்டு சந்தையை கைப்பற்ற முயற்சிக்கின்றன.ஆடை உற்பத்தி துறையினர் உள்நாட்டு வர்த்தகத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறித்த காலத்துக்குள் ஆடைகளை தயாரித்து அனுப்பும் திறனை திருப்பூர் பின்னலாடை துறையினர் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆடை தயாரிப்பை விரைவுபடுத்தும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முனைப்புகாட்டவேண்டும். இதன்மூலம், திருப்பூரின் லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் என்ற லட்சியம் விரைவில் நிறைவேறுவது நிச்சயம்'' என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமையில், தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடந்தது.
இதில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மோகன், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X