பொது செய்தி

தமிழ்நாடு

தைப்பூச திருவிழா கோலாகலம்: பாதயாத்திரை பக்தர்கள் அன்னதானம்

Added : பிப் 09, 2020
Advertisement
 தைப்பூச திருவிழா கோலாகலம்: பாதயாத்திரை பக்தர்கள் அன்னதானம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்புஅபிேஷகம்,ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள்நடைபெற்றன. சுப்ரமணிய சுவாமி, வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில், தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தைப்பூச தேரோட்டம்கிணத்துக்கடவு அடுத்துள்ள முத்துமலை முருகன் கோவிலில், நேற்று மாலை, 3:00 மணிக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நெகமம், காளியப்பம்பாளையத்தில், தங்கவேல் அய்யன் வேலாயுதசுவாமி கோவிலில், விநாயகர் வழிபாடு, சுப்ரமணிய மூலமந்திர வழிபாடு, 108 லிட்டர் பால் அபிேஷகம், கலச அபிேஷகத்தை தொடர்ந்து முருகனுக்கு அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நெகமம் - ரங்கம்புதுார் ரோட்டில் அமைந்துள்ள சின்னண்ணசுவாமி கோவிலில் முருகனுக்கு அலங்கார பூஜை நடந்தது. பொதுமக்கள் மற்றும்பழநிபாதயாத்திரை குழுவினருக்கு அன்னதானம் வினியோகிக்கப்பட்டது.நெகமம் - பல்லடம் ரோட்டில் உள்ள மாயாண்டீஸ்வரர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

பழநிக்கு யாத்திரைதைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டமாக, பழநிக்கு பாத யாத்திரை சென்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், பழநி பாத யாத்திரை செல்பவர்களுக்கு தர்பூசணி, நீர்மோர், சர்பத், டீ, காபி போன்றவை வழங்கப்பட்டது.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி வணிகவியல் வங்கியியல் மற்றும் காப்பீட்டுத்துறை சார்பில், பிரதிபலிப்பு வண்ண ஒட்டு காகிதங்களை (ரிப்ளக்டர்) ஒட்டும் நிகழ்ச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்தது.

சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனியில் 'சேவாலயம்' அமைப்பு சார்பில், பழநி பாத யாத்திரை பக்தர்களுக்கு,'ரிப்ளக்டர்' ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது. 300க்கும் மேற்பட்ட பழநி பக்தர்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X