தற்காலிக மாற்றுப்பாதையில் நாள் முழுக்க புழுதி மண்டலம்

Added : பிப் 09, 2020
Advertisement
 தற்காலிக மாற்றுப்பாதையில் நாள் முழுக்க புழுதி மண்டலம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் முக்கிய ரோடுகள் சந்திப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதை, மண் ரோடாக விடப்பட்டுள்ளதால், புழுதி நிலவி மக்களை அவதிக்குள்ளாக்குகிறது.

பொள்ளாச்சியில் நகர எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக, தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தி, பணி மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக, தேர்நிலை அருகே உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் புதர்கள் அகற்றப்பட்டு, தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், உடுமலை ரோட்டுக்கு திரும்பும் போது, நெரிசல் ஏற்படுவதால், இந்த மாற்றுப்பாதையை வாகனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. மாற்றுப்பாதை, மண் பாதையாக விடப்பட்டுள்ள நிலையில், நாள் முழுக்க ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த வழியே செல்லும் போது, புழுதியை கிளப்புகின்றன.

இதனால் கிளம்பும் புழுதிப்படலம், அப்பகுதி முழுக்க படர்ந்து, மக்களை பாடாய் படுத்துகிறது. அருகே பயணிகள் நிழற்கூரையில் நிற்கும் மக்கள், மண் துகளை சுவாசித்து, உடல் நலக் கோளாறுக்கு ஆளாகின்றனர்.ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள்வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X