தமிழ்நாடு

பழமை வாய்ந்த நூலக கட்டடத்தை...எப்போ கட்டுவீங்க!எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வாசகர்கள்

Added : பிப் 09, 2020
Advertisement
 பழமை வாய்ந்த நூலக கட்டடத்தை...எப்போ கட்டுவீங்க!எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வாசகர்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 66 ஆண்டுகளாக செயல்படும் கிளை நுாலகத்துக்கு புதிய கட்டடம் எப்போது கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.பொது நுாலகத் துறைக்கு சொந்தமான கிளை நுாலகம் பொள்ளாச்சி மரப்பேட்டையில் கடந்த, 1954ல் அமைக்கப்பட்டது. இந்த நுாலகத்தில் தற்போது, ஒரு லட்சத்து, 800 புத்தகங்கள் உள்ளன; 15,750 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் செயல்படும், 40 ஊர்ப்புற, பகுதிநேர மற்றும் கிளை நுாலகங்களின் ஊதிய மையமாகவும் உள்ளது.கடந்த, 66 ஆண்டுகளாக உள்ள நுாலகத்தின் கட்டடம் பழமையின் காரணமாக மழைக்குஒழுகுவதுடன் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

போதிய பராமரிப்பில்லாத கட்டடத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க சிரமப்பட்டனர். மழை நீர் உள்ளே புகுவதால், புத்தகங்களை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. நுாலக முதல் கட்டடத்தின் ஒரு பகுதியில் பராமரிப்பில்லாமல் இருந்ததால், அந்த பகுதிக்கு வாசகர்கள் அனுமதிக்கப்படவில்லை.நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்; இதற்கான பராமரிப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். மகாலிங்கபுரத்திலுள்ள நுாலகத்துக்குசொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என வாசகர்கள் தரப்பில்கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கட்டடம் மிக மோசமாக உள்ளதால் வாசகர்கள் அமர்ந்து படிக்க இட நெருக்கடியும் இருந்தது. பல அரிய நுால்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, மாற்று கட்டடத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கடந்தாண்டு அக்., மாதம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அடங்கிய குழுவினர் நுாலகத்தை ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து, நுாலகம் குடிமைப்பொருள் வழங்கல் துறை தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட்ட கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.தற்காலிக கட்டடத்துக்கு இடம் மாற்றப் பட்டு ஐந்து மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை பழைய கட்டடத்தை இடித்து புதியதாக கட்டடம் கட்டவும், நுாலக இடத்தை மீட்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

வாசகர்கள் கூறியதாவது: பழமை வாய்ந்த நுாலகத்துக்கு கட்டடம் கட்டும் பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. நுாலக இட பிரச்னை அல்லது நிதிஒதுக்கீடு குறித்து தெளிவான விளக்கம் அளிக்க நுாலகத்துறை முன்வர வேண்டும்.பராமரிப்பில்லாத கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் புதியதாக கட்டடம் கட்டப்பட்ட வேண்டும்.

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக நடத்தப்படும் வகுப்புகளை நுாலக கட்டடத்தில் நடத்தும் வகையில் அறை வசதி ஏற்படுத்த வேண்டும். போட்டித்தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் அதிகளவு வைக்கவேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X