பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 1.39 கோடிக்கு வர்த்தகம் உழவர் சந்தையில் அமோகம்

Added : பிப் 09, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், ஒரு கோடியே, 36 லட்சத்து, 65 ஆயிரத்து, 550 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனை செய்கின்றனர்.

காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும்; விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், சந்தையில் காய்கறி வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மாதம், ஒரு கோடியே, 36 லட்சத்து, 65 ஆயிரத்து, 550 ரூபாய்க்கு காய்கறி விற்பனையானது.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ''கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு, 52 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்தனர். தினமும், காய்கறிகள் வாங்க, 2,501 பேர் வந்தனர். தினமும், நான்கு லட்சத்து, 40 ஆயிரத்து, 824 ரூபாய் மதிப்புள்ள, 15,307 கிலோ காய்கறி வரத்து இருந்தது.மொத்தம், 466.2 டன் காய்கறி வரத்து இருந்தது.

இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 36 லட்சத்து, 65 ஆயிரத்து, 550 ரூபாயாகும். மொத்தம், 1,604 விவசாயிகள்; 77ஆயிரத்து, 544 நுகர்வோர்கள் உழவர் சந்தையை பயன்படுத்தியுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X