உடுமலை:உடுமலை கொடிங்கியம் மகாலட்சுமி அம்மன் கோவிலில், சிவராத்திரி விழா வரும் 21ம் தேதி நடக்கிறது.உடுமலை அருகே கொடிங்கியத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 21ம் தேதி இரவு, 10:30 மணிக்கு மேல் சிவராத்திரி விழா தொடங்கி, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது. அன்று இரவு 9:00 மணிக்கு பக்தி பாடல்கள், இன்னிசை கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து 23ம் தேதி பகல், 12:00 மணிக்கு அமாவாசை பூஜைகளும், அன்னதானமும் நடக்கிறது. இதற்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE