சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்ரோஷ யானைக்கு வாழைத்தண்டு: வனத்துறை முயற்சி பலனளிக்குமா?

Added : பிப் 09, 2020
Advertisement
 ஆக்ரோஷ யானைக்கு வாழைத்தண்டு: வனத்துறை முயற்சி பலனளிக்குமா?

ஆனைமலை:ஆழியாறு பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை ஆண் காட்டு யானையை, வாழைத்தண்டு கொடுத்து வனத்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை பகுதிகளில் கடந்த, இரண்டு மாதங்களாக ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வருகிறது. இந்த யானை கடந்த வாரம் ஆழியாறு சோதனைச்சாவடி அருகே தனியார் தோட்டத்தில், தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியது.அதன்பின், ஆழியாறு சோதனைச்சாவடிக்கு அருகேயுள்ள வன செயல் விளக்க மையத்தினுள் புகுந்து பலகைகளை சேதப்படுத்தியது. குரங்கு அருவி அருகே இந்த யானை செல்வதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், குரங்கு அருவி அருகே யானை வந்தது. யானையின் ஆக்ரோஷத்தை தணிக்க வனத்துறையினர் வாழைத்தண்டு கொடுத்தனர். யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க, வாழைத்தண்டு கொடுக்கும் முயற்சி எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், 'வனத்தினுள் இருந்து உணவு, தண்ணீருக்காக ஆழியாறு அணைப்பகுதிக்கு வரும், ஒற்றை ஆண் காட்டு யானை, பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. யானையின் வேகத்தை குறைக்க, வாழைத்தண்டு கொடுத்து வருகிறோம்.மேலும், வால்பாறை ரோடு, குரங்கு அருவி அருகே யானை வராமல், வனத்தினுள் விரட்டப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X