பொது செய்தி

தமிழ்நாடு

பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்

Added : பிப் 09, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி:பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டில் வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலர் முருகப்பன்,
 பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி:பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டில் வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவன் அய்யனார் வரவேற்றார். கல்வி இயக்குனர் நாராயணசாமி, கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வீரமணி, பாஸ்கரன், துணை முதல்வர் சேதுமுருகன் வாழ்த்திப் பேசினர்.வணிகவியல் துறைத்தலைவர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பெரம்பலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கணேசன் 'தொழில் முனைவோர் மேம்பாட்டில் வங்கிகளின் பங்கு' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினர். உதவி பேராசிரியர்கள் சந்தனராஜ், வெங்டேசன், மணிமேகலை, அனிதா, கிரித்திகா ஆகியோர் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர்கள் சந்தோஷ்குமார், அபிரஹாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X