பொது செய்தி

தமிழ்நாடு

2,057 வழக்குகளுக்கு ரூ.1.7 கோடி வசூல் லோக்அதாலத் விசாரணையில் தீர்வு

Added : பிப் 09, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோர்ட் வளாகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், 'லோக்அதாலத்' விசாரணை நடத்தப்பட்டு, கோர்ட் நிலுவை மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பதிவான வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, நிரந்தர தீர்வு காணப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான முதல் தேசிய லோக்அதாலத் விசாரணை, சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி ஜான்மினோ தலைமையில் நேற்று நடந்தது.
 2,057 வழக்குகளுக்கு ரூ.1.7 கோடி வசூல் லோக்அதாலத் விசாரணையில் தீர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோர்ட் வளாகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், 'லோக்அதாலத்' விசாரணை நடத்தப்பட்டு, கோர்ட் நிலுவை மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பதிவான வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, நிரந்தர தீர்வு காணப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான முதல் தேசிய லோக்அதாலத் விசாரணை, சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி ஜான்மினோ தலைமையில் நேற்று நடந்தது. விசாரணை குழுவில், மாஜிஸ்திரேட்டுகள் தங்கமணி கணேசன், செல்லையா மற்றும் அரசு வக்கீல் சம்பத்குமார் பங்கேற்றனர்.

விசாரணையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்ட, 60 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 17க்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், 47.32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவானது. செக்மோசடி செய்ததாக, 358 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ஐந்துக்கு தீர்வு காணப்பட்டு, ஐந்து லட்சத்து, மூவாயிரத்து, 360 ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.சொத்து மற்றும் பண பரிவர்த்தனை வழக்குகள், 207 விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 15 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 65 லட்சத்து, 41 ஆயிரத்து, 121 ரூபாய்க்கு உத்தரவானது.வாரிசு உரிமை கோரிய வழக்குகளாக, 87 விசாரிக்கப்பட்டு, 11 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

சமரசத்துக்கு உட்பட்ட குற்றவியல் வழக்குகள், 283 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 106 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு,அபராதமாக, ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 100 ரூபாய் வசூலிக்க பட்டது. நீதிமன்றங்களில் தொடரப்படாத, வங்கி வழக்குகள், 1023 விசாரிக்கப்பட்டு, 62 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 50 லட்சத்து, 70 ஆயிரத்து, 622 ரூபாய் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குடும்ப வழக்குகள், 39 விசாரிக்கப்பட்டு, ஒன்றுக்கு மட்டும் நிரந்தர தீர்வு காணப்பட்டது. நேற்றைய தேசிய லோக்அதாலத் விசாரணையில், 2,057 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், 217 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ஒரு கோடியே, 70 லட்சத்து, 43 ஆயிரத்து, 203 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X