தமிழ்நாடு

கோவை என்.சி.சி., குழுவுக்கு மகுடம்! தர வரிசை பட்டியலில் முதலிடம்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement
கோவை என்.சி.சி., குழுவுக்கு மகுடம்!  தர வரிசை பட்டியலில் முதலிடம்

கோவை:மாநில அளவில், தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) சிறந்த குழுவுக்கான தர வரிசை பட்டியலில், கோவையை சேர்ந்த, 2 டி.என்., பீரங்கி படை முதலிடம் பெற்றுள்ளது.தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான், நிகோபர் பகுதிகளை உள்ளடக்கிய, தேசிய மாணவர் படை இயக்குனரகம், சென்னையில் செயல்படுகிறது. இதன் கீழ், 58 குழுக்கள், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் தேசிய மாணவர் படைகள் உள்ளன. அதில், சிறப்பாக செயல்படும் குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் தர வரிசைப்படுத்தி, கவுரவிக்கப்படுகிறது.
முதலிடம்
நடப்பாண்டுக்கான தர வரிசை பட்டியலில், முதல் ஆறு ரேங்கில், கோவையை சேர்ந்த மூன்று என்.சி.சி., குழுக்கள் இடம் பெற்றிருக்கின்றன. 2 டி.என்., பீரங்கிப்படை குழு, 1,700க்கு, 1,158 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்துள்ளது. இக்குழுவின் கீழ், 8 கல்லுாரிகள் மற்றும், 15 பள்ளிகளை சேர்ந்த என்.சி.சி., படைகள் உள்ளன.
இதுகுறித்து, 2 டி.என்., பீரங்கிப்படை கமாண்டிங் அதிகாரி, லெப்டினன்ட் கர்னல் கிரிஸ் பார்தன் கூறுகையில்,''தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, முதல் ரேங்க் பெற்று வருகிறோம். இவ்விருதுடன், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளி, கல்லுாரிகளில் உள்ள என்.சி.சி., மாணவர்களின் சான்றிதழ், சமூகப்பணி, குடியரசு, சுதந்திர தின விழாக்களில் பங்கேற்றல், முகாம் நடத்துதல் என, பல பிரிவுகளில் மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும், என்.சி.சி., அலுவலர்களின் பங்களிப்பு, முக்கியத்துவம் வாய்ந்தது,'' என்றார்.
'பராக்கரம்-2020'
இதற்கான பாராட்டு விழா மற்றும், 'பராக்கரம்-2020' என்ற கலை நிகழ்வு, கோவை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. அப்போது, தேசிய மாணவர் படை மாணவ, மாணவியருக்கு மூன்று கி.மீ., ஓட்டப்பந்தயம், அணிவகுப்பு போட்டி, வினாடி வினா, பேச்சு, திறன் போட்டி, நடனம், இசை உள்ளிட்ட கலைநிகழ்வுகள் நடத்தப்பட்டன. கோவை, ஈரோடு, சேலம் உட்பட, 6 மாவட்டங்களில் உள்ள, 26 கல்லுாரிகளை சேர்ந்த, 505 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பி.எஸ்.ஜி., கல்லுாரி முதல்வர் பிருந்தா, ராணுவ அதிகாரிகள் மூர்த்தி, மணிகண்டன், பால்பாண்டி, பலவான் சிங், என்.சி.சி., அலுவலர்கள் சுதாகர், ஆல்பர்ட், ஜீவா, ஜோசப் சீயாம் உட்பட பலர் பங்கேற்றனர்.
அணிவகுப்பில் அசத்தல்
அணிவகுப்பு போட்டியில், கோவை கே.சி.டி., கல்லுாரி அணி முதலிடம், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி அணி இரண்டாமிடம், தடை தாண்டும் ஓட்டத்தில் என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர் அணி முதலிடம், எஸ்.ஆர்.எம்.வி., அணி இரண்டாமிடம், துப்பாக்கி சுடும் போட்டியில் கிருஷ்ணா கல்லுாரி முதலிடம், கோவை அரசு கலை கல்லுாரி இரண்டாமிடம் பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X