பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்டபடி நடைபயண போராட்டம்: பழங்குடியின மக்கள் அறிவிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement
 திட்டமிட்டபடி நடைபயண போராட்டம்: பழங்குடியின மக்கள் அறிவிப்பு

வால்பாறை:அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி நாளை கோவைக்கு நடைபயணம் செல்வது என்று பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.
வால்பாறையில் காடம்பாறை,கருமுட்டி,வெள்ளிமுடி, சங்கரன்குடி, வில்லோனி நெடுங்குன்று, கல்லார்குடி, பரமன்கடவு, பாலகணாறு உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில், வன உரிமை சட்டத்தை அமல்படுத்தி, பட்டா வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட கல்லார்குடி செட்டில்மென்ட் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அனைத்து செட்டில்மென்ட் பகுதிக்கும், அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாளை, 10ம் தேதி வால்பாறையில் இருந்து, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயண போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டம் குறித்த பேச்சு வார்த்தை வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் வெங்கடாசலம் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி மற்றும் வனத்துறை அதிகாரிகள், பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர். வனத் துறை அதிகாரிகள் பேசும் போது, 'பழங்குடியின மக்களின் கோரிக்கை, 15 நாட்களில் படிப் படி யாக நிறைவேற்றப்படும். எனவே, போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்,' என்றனர்.

ஆனால், பழங்குடியினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.பழங்குடியின மக்கள் நலவாழ்வு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தனராஜ் கூறுகையில், 'மத்திய அரசு அறிவித்துள்ளபடி பழங்குடியின மக்களுக்கு வனஉரிமை சட்டத்தின் கீழ், பட்டா வழங்க வேண்டும்.

அதிகாரிகளின் பேச்சை நம்பி ஏற்கனவே மூன்று முறை போராட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த முறை திட்டமிட்ட படி வால்பாறையிலிருந்து கோவைக்கு, பழங்குடியின மக்கள் 500 பேர், 120 கி.மீ., துாரம் நான்கு நாள் நடைபயணமாக சென்று, கலெக்டரிடம் மனு கொடுப்போம். திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X