வள்ளலார் மன்றத்தில் தைப்பூச விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் மன்றத்தில் தைப்பூச விழா

Added : பிப் 09, 2020
Share

சங்கராபுரம்:சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தைப்பூச விழாவையொட்டி, சன்மார்க்க ஊர்வலம் நடந்தது.
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற செயலர் நாராயணன், பொருளாளர் முத்துக்கருப்பன், மூர்த்தி, வள்ளலார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.பின்னர் வள்ளலார் கோட்டத்தில் சிவஞான அடிகள் தலைமையில் அகவல் பாராயணம் நடந்தது. தொடர்ந்து முர்த்தி சன்மார்க்க கொடி ஏற்றினார். சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்தனன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் விஜயகுமார், குசேலன், பாண்டலம் அரிமா சங்க தலைவர் வேலு, அரிமா மாவட்ட தலைவர் ஜனனி, அகல்யா ரவிச்சந்திரன், தீபா சுகுமார், ரோட்டரி செயலர் சுதாகர், ராதாகிருஷ்ணனண உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X