தமிழ்நாடு

கடைமடைக்கு நீர் எட்டவில்லை! பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; தண்ணீர் திருட்டு, விற்பனை காரணமாக காயும் பயிர்கள்

Added : பிப் 09, 2020
Advertisement
 கடைமடைக்கு நீர் எட்டவில்லை!  பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; தண்ணீர் திருட்டு, விற்பனை காரணமாக காயும் பயிர்கள்

உடுமலை:பி.ஏ.பி., பாசன நீர் திருடப்படுவதாலும், ஆயக்கட்டில் இல்லாத நிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதால், கடை மடைக்கு தண்ணீர் வரவில்லை, என பி.ஏ.பி., அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

பி.ஏ.பி., முதலாம் மண்டலத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜன.,27 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழையில்லாமல் கடும் வறட்சி மற்றும் கோடை காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களில், வழியோரங்களில், நேரடியாக ஓஸ் அமைத்தும், கால்வாய் கரைகளை துளையிட்டும், பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் திருடப்படுகிறது.அதிலும், இரவு நேரங்களில் அபரிமிதமான தண்ணீர் திருட்டு நடக்கிறது.

கால்வாயில் திறக்கப்படும் நீரில் பெருமளவு மாயமாவதால், பாசன நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பூலாங்கிணர் கிளைக்கால்வாய், வடுகபாளையம் கால்வாய் கிராமநீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் , உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, பி.ஏ.பி., செயற்பொறியாளர் கோபியிடம் முறையிட்டனர்.

விவசாயிகள் கூறியதாவது :வறட்சியில் மண்டல பாசனம் துவங்கியுள்ளதால், தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடக்கிறது. கால்வாயின் இரு புறமும், ஓஸ் அமைத்தும், துளையிட்டும் திருடி வருகின்றனர். மேலும், தண்ணீர் பகிர்ந்து அளிக்கும் கீழ் நிலை அலுவலர்கள், ஊழியர்கள், ஆயக்கட்டில் இல்லாத நிலங்களுக்கு,பணத்தை பெற்றுகொண்டு, தண்ணீரை விற்று வருகின்றனர்.

வடுகபாளையம் கால்வாயில், தண்ணீர் திறந்து, 10 நாட்களாகியும், 1,500 ஏக்கர் நிலங்களில், 300 ஏக்கர் நிலத்திற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை. அதிலும், கடைமடை பாசன நிலங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை.இதனால், தென்னை, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் காய்ந்து வருகின்றன. நீர் நிர்வாக குளறுபடி காரணமாகவே விவசாயிகள் பாதிக்கின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, பாசன நிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

பி.ஏ.பி., உடுமலை செயற்பொறியாளர்,'' நீர் திருட்டு கண்காணிக்கப்பட்டு, பாசன நிலங்களுக்கு உரிய தண்ணீர் வழங்கப்படும்'' என உறுதியளித்தார்.செயல்படாத கண்காணிப்பு குழுபி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனம் வறட்சியில் துவங்கியுள்ளதால், தண்ணீர் திருட்டு அபரிமிதமாக உள்ளது. தண்ணீர் திருட்டை தடுக்க, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின் வாரியம், போலீசாரை கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, இரவு மற்றும் பகல் நேரங்களில், பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய் கரைகளில் ரோந்து சென்று, சட்ட விரோதமாக தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லை; கடந்த காலங்களில், நீர் திருடிய நபர்கள் மீது போலீசாரிடம், பி.ஏ.பி., அதிகாரிகள் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை;மின் இணைப்புகளும் துண்டிக்கவில்லை. அதனால், உடுமலை பகுதிகளில் பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது.எனவே,கோட்டாட்சியர் உடனடியாக, அரசுதுறை அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து, கண்காணிக்கவும், பாரபட்சமின்றி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X