பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா

Added : பிப் 09, 2020
Advertisement
 முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா

உடுமலை:தைப்பூசத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.

பிரசன்ன விநாயகர் கோவிலில், காலையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, பால், பன்னீர், உள்ளிட்ட 16 திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.மகா தீபாராதனையும், சிறப்பு அலங்காரத்துடன், சுப்ரமணியசுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளின் வெள்ளித் தேர் திருவீதி உலா நடந்தது.

மடத்துக்குளம், பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச பால்காவடி திருவிழா, ஆயிரத்து எட்டு படி பாலாபிேஷக பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பஞ்ச கவ்ய பூஜை, துர்க்கா லட்சுமி ஹோமம், இடும்பன் கடம்பன் பூஜை, கோ பூஜை, பால்குடங்களுடன் பூஜை நடந்தது.காலை, 9:00 மணிக்கு, ஆயிரத்து எட்டு பால்காவடிகளுடன் புறப்பட்டு, திருவீதிகளை வலம் வந்தனர். காலை, 10:00 மணிக்கு விநாயகர் ஞான தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு ஆயிரத்து எட்டு பால் குடங்களின் பாலாபிேஷகம் நடந்தது. சுவாமிகளுக்கு வெள்ளிக்கவச அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.

தைப்பூசத்தையொட்டி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், போடிபட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X