உருக்குலைந்த குட்டியகவுண்டனுார் ரோடு கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement
 உருக்குலைந்த குட்டியகவுண்டனுார் ரோடு கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்பு

உடுமலை:உடுமலை அருகே, கிராமத்திற்கு செல்லும் ரோடு, குண்டும், குழியுமாக உள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியுள்ளது.

உடுமலை அருகே, குட்டியகவுண்டனுாரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பிரதான ரோட்டிலிருந்து, இக்கிராமத்திற்கு செல்லும் ரோடு, இரண்டு கி.மீ., துாரம் அமைந்துள்ளது.

ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள, இந்த ரோடு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. பல இடங்களில் ரோடு மாயமாகி, பெரிய அளவில் குழி ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, ரோடு படுமோசமடைந்து, விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

இதனால், பள்ளி, கல்லுாரிகளுக்குச்செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.பால்,விவசாய விளை பொருட்களை வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகளும் வேதனையடைந்துள்ளனர்.மோசமான ரோடு காரணமாக, இக்கிராமத்திற்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்கு கூட சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல், கிராம மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

குட்டியகவுண்டனுார் கிராம ரோட்டை புதுப்பித்து தருமாறு, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயனில்லை; புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்றிய குழு மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் ரோட்டை புதுப்பிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X