பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆயக்கட்டில் மூன்று அரசு நெல் கொள்முதல் மையங்கள்: நாளை முதல் செயல்படும் என அதிகாரிகள் அறிவிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

உடுமலை:அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், நாளை முதல் மூன்று இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கல்லாபுரம், பூச்சிமேடு உள்ளிட்ட பகுதிகளில், தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

ஏற்கனவே, பல்வேறு நோய்த்தாக்குதல் காரணமாக, மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், குறைந்த விலைக்கு விற்பதால், அரசு கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும், என வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து, நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில், 14 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும், 'ஏ' கிரேடு நெல் ரகம், கிலோ ரூ.19.05க்கும், இதர பொது ரகங்கள், கிலோ ரூ.18.65க்கும் கொள்முதல் செய்யப்படும், என கடந்த மாதம், 22 ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதிலும், 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மடத்துக்குளத்தில் மட்டும் திறக்கப்படும், என அறிவிக்கப்பட்டிருந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். கூடுதல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில், கொழுமம், மடத்துக்குளம், கணியூர் என மூன்று இடங்களில், நாளை (10ம் தேதி முதல்) அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், 'பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், அறுவடை தீவிரமடைந்து உள்ள நிலையில், வியாபாரிகள், கிலோ, 14 முதல் 16 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு, விலை குறைவால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெல் கொள்முதல் மையங்களில், அனைத்து விவசாயிகளிடமும் பாரபட்சமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

நெல் ஈரப்பதம் அதிகம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்காமலும், துாற்றுவதற்கு, சாக்குக்கு என கட்டணம் வசூல் உள்ளிட்ட முறைகேடுகள் இல்லாமல், கொள்முதல் செய்வதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X