பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தில் முதன்மை பெற திட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வில் நடப்பாண்டிலும் தேர்ச்சி சதவீதத்தில் முதன்மை பெற, தேர்வு விடுமுறையிலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1,2 வகுப்பு பொதுத்தேர்வின் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம், முதன்மை இடங்களை பெற்றது. நடப்பாண்டில், பொதுத்தேர்வுக்கான ஆசிரியர்களுக்கான ஒவ்வொரு கூட்டத்திலும், கல்வித்துறை அலுவலர்கள் இந்த வெற்றியை அறிவுறுத்தி வருகின்றனர். பொதுதேர்வுக்கான செய்முறைத்தேர்வுகள், முதல் சுழற்சியில் பல பள்ளிகளில் துவங்கியுள்ளது.

செய்முறைத் தேர்வுகளைத் தொடர்ந்து, குறுகிய நாட்கள் விடுமுறையில், பொதுத்தேர்வுகளும் மார்ச் மாதம் துவங்குகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டிலும், தேர்ச்சி நிலையை தொடர, தேர்வு விடுமுறை நாட்களிலும், மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து தேர்வுக்கு தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு தேர்வுக்கு இடையில் ஓரிரு நாட்கள் விடுமுறை உள்ளது.கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, இந்த விடுமுறை நாட்களிலும் பள்ளியில் ஆலோசனை அளித்து, அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த, கல்வித்துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பாடத்திட்ட மாற்றம் மற்றும் பொதுத்தேர்வுக்கான எந்த மாதிரியும் இல்லாதது, அரையாண்டுத் தேர்வுகளில் குறைந்துள்ள தேர்ச்சி சதவீதம் போன்ற காரணங்களால், மாணவர்களை முழுமையாக ஒவ்வொரு தேர்வுக்கும் தயார்படுத்துவதற்கான திட்டமிடுதலாக தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.

தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' மாணவர்கள், விடுமுறை நாட்களில், கவனச் சிதறல் ஏற்பட்டு, தேர்வுக்கு முழுமையாக தயாராகாமல் விடுவதால் தேர்ச்சி பெறாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த விடுமுறை நாள் வகுப்பு முக்கியமாக தேவையாக உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X